எரிபொருள் நிரப்பு நிலையத்தில் அடாவடி
ஹரகமவில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றுக்கு வந்த அமைச்சர் ஒருவரின் நண்பர்கள் என கூறிக்கொண்ட குழுவினர் ஊழியர்கள் மற்றும் முகாமையாளரைத் தாக்கியுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
க்யூஆர் பாஸ் இல்லாமல் தங்கள் வாகனத்துக்கு எரிபொருளைக் கொடுக்க வேண்டும் என எம்பி சகாக்கள் கேட்டுள்ளனர்.
எனினும் அவர்களது கோரிக்கையை நிரப்பு நிலைய ஊழியர்கள் நிராகரித்ததை அடுத்து அவர்கள் தாக்குதல் நடத்திய தாக கூறப்படுகின்றது.
பொலிஸில் முறைப்பாடு
இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
அத்துடன், அமைச்சரின் சகாக்கள் சண்டையிட்ட சம்பவம் எரிபொருள் நிரப்பு நிலையத்தின் கமெராக்களிலும் பதிவாகியுள்ளதாக கூறப்படுகின்றது.