எலுமிச்சை பழத்தின் தோல், முடி மற்றும் நம் வயிற்றின் ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதன் சாறு எவ்வளவு புளிப்பாக இருந்தாலும் சரி, அதில் என்னெற்ற மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது.
இந்த எலுமிச்சை பழத்தை நீங்கள் பல வழிகளில் பயன்படுத்தியிருக்கலாம், அதேபோல் அதன் தோலை குப்பைத் தொட்டியில் வீசியிருப்பீர்கள்.
ஆனால் இந்த செய்தி கிடைத்ததும், நீங்கள் அவ்வாறு செய்ய மாட்டீர்கள். எனவே எலுமிச்சம் பழத்தோல்களை எப்படிப் பயன்படுத்தலாம் மற்றும் அதில் எவ்வளவு நன்மைகள் உள்ளது என்பதை பார்ப்போம்.
எலுமிச்சை பழத் தோல்களின் நன்மைகள் : வைட்டமின்கள், நார்ச்சத்து, பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் கால்சியம் போன்ற முக்கிய ஊட்டச்சத்துக்கள் எலுமிச்சை பழத்தோல்களில் காணப்படுகின்றன, இது நம் உடலுக்கு பல வழிகளில் நன்மை பயக்கும்.
அதேபோல் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் எலுமிச்சை பழத்தோல்களில் காணப்படுகின்றன, இது உடலுக்கு வெளிப்புற மற்றும் உள் வழியில் நன்மை பயக்கும்.
எலுமிச்சை பழத்தோல்களை சாப்பிட்டு வந்தால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். எலுமிச்சை பழத்தோல்களில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் காணப்படுகின்றன, இது பற்கள் தொடர்பான பிரச்சனைகளை நீக்க உதவும்.
எலுமிச்சை பழத் தோல்களை எவ்வாறு உபயோகப்படுத்துவது:
எலுமிச்சை பழத்தோலை துருவிக்கொள்ளவும் பின்னர் அதை காய்கறிகள், பானங்கள் அல்லது சாலட்டில் கலந்து சாப்பிடுங்கள்.
எலுமிச்சை பழத்தோலை அரைத்து ஆலிவ் எண்ணெயுடன் கலந்து அதன் மூலம் பல ரேசிபிகளை நீங்கள் தயார் செய்யலாம்.
எலுமிச்சம் பழத்தோலைத் தேய்த்த பிறகு, மிக்ஸியில் நன்கு அரைத்து அதை பிரெட் ஸ்ப்ரெடாக பயன்படுத்திக் கொள்ளலாம்.
நீங்கள் சமையலறையை சுத்தம் செய்ய விரும்பினால், எலுமிச்சை பழத்தோல்களில் பாதியில் பேக்கிங் சோடாவைத் தடவி கேஸ் மற்றும் ஸ்லாப்பை சுத்தம் செய்துக் கொள்ளலாம்.
பேக்கிங் சோடாவைத் தவிர, அதன் தோலுடன் கலந்த வினிகரையும் பயன்படுத்தலாம்.
மழைக்காலத்தில் பூச்சிகள் உடலில் அதிகம் ஒட்டிக்கொண்டால், எலுமிச்சைத் தோலை உடலில் தேய்க்கவும்.
சமையலறையின் மூலையில் துர்நாற்றம் வீசினால், எலுமிச்சைத் தோலை அங்கே வைத்தால், துர்நாற்றம் மறைந்துவிடும்.
எலுமிச்சம்பழத் தோலைத் தேனில் போட்டு, முகத்தை சுத்தம் செய்யலாம்.
ஃபேஸ்மாஸ்க் தயார் செய்ய நீங்கள் எலுமிச்சை பழத்தோலை பயன்படுத்திக் கொள்ளலாம்.