வைத்தியசாலைகளில் மீண்டும் மருந்து தட்டுப்பாடு
நாடளாவிய ரீதியில் உள்ள வைத்தியசாலைகளில் மருந்து தட்டுப்பாடு மீண்டும் மோசமான நிலையை எட்டியுள்ளதாகஅரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர், வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக, கொழும்பு தேசிய வைத்தியசாலை மற்றும் புற்றுநோய் வைத்தியசாலை உள்ளிட்ட அனைத்து வைத்தியசாலைகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அனைத்து வகையான மருந்துகளுக்கும் தட்டுப்பாடு நிலவுவதன் காரணமாக, வைத்தியசாலைகளின் அன்றாட நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் சிரமங்கள் ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.