யாழ் வடமராட்சியில் அதிக மருந்து பாவனையால் இரத்த வாந்தி எடுத்து குடும்பஸ்த்தர் பலி

அதிக மருந்து பாவனையால் இரத்த வாந்தி எடுத்தவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்
வடமராட்சி இமையான் பகுதியை சேர்ந்த இராசா சிவபாதம் (வயது 48) என்பவரே உயிரிழந்துள்ளார்.
வீட்டில் இரத்த வாந்தி எடுத்த நிலையில் , பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் வியாழக்கிழமை உயிரிழந்துள்ளார்.
அதிகளவான மருந்து பாவனையால், உயிரிழப்பு ஏற்பட்டது என அறிக்கையிடப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர், கடந்த 08 மாத காலமாக உளநோய்க்கு உள்ளான நிலையில் அதற்கு சிகிச்சை பெற்று அதற்கான மருந்துகளை பாவித்து வந்தவர் என உறவினர்கள் தெரிவித்தனர்.
Related Post

யாழில் 24 வயது இளைஞன் தற்கொலை
யாழில் நேற்று மாலை வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுழிபுரம் – பாண்டவட்டை பகுதியில், [...]

அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு
லங்கா சதொச நிறுவனம் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சில அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலையை [...]

யாழ் சிறையில் கைதிகளுக்கிடையே மோதல் – ஒருவர் காயம்
யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இடம்பெற்ற கைக்கலப்பில் காயமடைந்தவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை [...]