கொழும்பில் மீண்டும் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம்

இலங்கை அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த ஆர்ப்பாடமானது இன்று (07-09-2022) மாலை இடம்பெற்றுள்ளது.
காலி முகத்திடல் போராட்டக்களத்தின் செயற்பாட்டாளர்கள், சிவில் சமூகத்தினர் உள்ளிட்ட மேலும் பலர் இணைந்து பத்தரமுல்லையில் உள்ள தியதஉயன பகுதியில் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
மேலும், இந்த ஆர்ப்பாட்டத்தை கறுப்பு உடைகள் அணிந்து போராட்டக்காரர்கள் முன்னெடுத்துள்ளனர்.
மக்களுக்கு நீதி வேண்டும்! விலைகள் குறைக்கப்பட வேண்டும்.
இந்த ஆர்ப்பாட்டம் இலங்கை அரசாங்கத்தின் அடக்குமுறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மக்களுக்கு நிவாரணம் வழங்காத இந்த அரசாங்கத்தினை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்ற தொணிப்பொருளில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Related Post

சுற்றுலா சென்ற 4 இளைஞர்கள் நீரில் மூழ்கி மாயம்
வெல்லவாய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எல்லாவல நீர்வீழ்ச்சியில் குளிப்பதற்குச் சென்ற நான்கு இளைஞர்கள் இன்று [...]

விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன் உள்ளார்
விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் மிக்க நலமுடன் இருப்பதாக தஞ்சாவூரில் உலகத் தமிழர் [...]

யாழ் ஊர்காவற்துறையில் 11 வயது சிறுவன் கிணற்றில் விழுந்து உயிரிழப்பு
ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காரைநகர் – இலகடி பகுதியில் சிறுவன் ஒருவன் கிணற்றில் [...]