சுற்றுலா சென்ற 4 இளைஞர்கள் நீரில் மூழ்கி மாயம்
வெல்லவாய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எல்லாவல நீர்வீழ்ச்சியில் குளிப்பதற்குச் சென்ற நான்கு இளைஞர்கள் இன்று (21) காணாமல் போயுள்ளனர்.
அவர்கள் நால்வரும் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
சுற்றுலா வந்த 10 இளைஞர்கள் அந்த நீர்வீழ்ச்சியில் குளிப்பதற்காகச் சென்ற நிலையில், நான்கு பேர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர்.
கல்முனை மற்றும் சாய்ந்தமருது பகுதிகளை சேர்ந்த 22 முதல் 23 வயதுக்குட்பட்ட நான்கு இளைஞர்களே காணாமல் போயுள்ளனர்.