Day: September 7, 2022

தென் கொரியா பெண் இந்து முறைப்படி திருமணம்தென் கொரியா பெண் இந்து முறைப்படி திருமணம்

வாணியம்பாடியில் முனைவர் பட்டம் பெற்ற மணமகனுக்கும், தென் கொரியா நாட்டை சேர்ந்த மணமகளுக்கும் இந்து முறைப்படி திருமணம் நடைபெற்றது. திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த வெள்ளக்குட்டை பகுதியை சேர்ந்தவர் பிரவீன்குமார், கோயம்புத்தூர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் கல்லூரியில் ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங் [...]

ஏமனில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு – 21 இராணுவத்தினர் பலிஏமனில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு – 21 இராணுவத்தினர் பலி

ஏமனில் கிளர்ச்சிப் படையினர் கட்டுப்பாட்டில் இருக்கும் தெற்குப் பகுதியில் ராணுவ சாவடி ஒன்றின் மீது அல்கொய்தா பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டு தாக்குதலில் 21 இராணுவத்தினர் உயிரிழந்தனர். அப்யான் மாகாணத்தில் உள்ள ஒரு ராணுவ முகாமை குறிவைத்து அல்கொய்தா அமைப்பைச் சேர்ந்தவர்கள் [...]

3 இளம் பிக்குகளை துஸ்பிரயோகம் செய்த பௌத்த மதகுருவை தேடி வேட்டை3 இளம் பிக்குகளை துஸ்பிரயோகம் செய்த பௌத்த மதகுருவை தேடி வேட்டை

3 இளம் பிக்குகளை கல்முனை பகுதி விஹாரை ஒன்றில் வைத்து பாலியல் துஸ்பிரயோகம் செய்த பௌத்த மதகுருவை கைது செய்ய பொலிஸாரினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விஹாரை ஒன்றில் புதிதாக இணைந்த 3 இளம் [...]

டின் மீன் இறக்குமதியை கட்டுப்படுத்தக் கோரிக்கைடின் மீன் இறக்குமதியை கட்டுப்படுத்தக் கோரிக்கை

இன்று (7) வர்த்தக அமைச்சில் உள்ளூர் டின் மீன் உற்பத்தியாளர் சங்கத்துடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டு, உள்நாட்டு டின் மீன் உற்பத்தியாளர்களைப் பாதுகாக்குமாறு தமது கோரிக்கைகளை அமைச்சரவைக்கு முன்வைக்கவுள்ளதாக வர்த்தக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்தார். இறக்குமதி [...]

கொழும்பில் மீண்டும் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம்கொழும்பில் மீண்டும் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம்

இலங்கை அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த ஆர்ப்பாடமானது இன்று (07-09-2022) மாலை இடம்பெற்றுள்ளது. காலி முகத்திடல் போராட்டக்களத்தின் செயற்பாட்டாளர்கள், சிவில் சமூகத்தினர் உள்ளிட்ட மேலும் பலர் இணைந்து பத்தரமுல்லையில் உள்ள தியதஉயன பகுதியில் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர். [...]

அரச வேலைக்காக பெண்ணை தகாத உறவுக்கு அழைத்த யாழ் பிரதிநிதிஅரச வேலைக்காக பெண்ணை தகாத உறவுக்கு அழைத்த யாழ் பிரதிநிதி

அரச வேலை பெற்றுத் தருவதாக் கூறி, பெண்ணொருவரிடம் தகாத உறவுக்கு அழைத்ததுடன், 50 ஆயிரம் ரூபாய் பணம் லஞ்சமாக கோரிய இருவரை எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, கொழும்பு பிரதான நீதவான் ஹர்ஷண கெகுணவெல, இன்று (07) உத்தரவிட்டார். [...]

வகுப்பறையில் பீர் குடித்த மாணவிகள் – பெற்றோர்கள் அதிர்ச்சிவகுப்பறையில் பீர் குடித்த மாணவிகள் – பெற்றோர்கள் அதிர்ச்சி

பிரபல பாடசாலை மாணவியொருவர் தம்முடன் கல்வி பயிலும் சக மாணவிகளுக்கு வீட்டிலிருந்து எடுத்து வந்த பியரை பருகிய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவருகின்றது. காலி மாவட்டத்திலுள்ள ரூக்கடவல நகரிலுள்ள பிரதான பாடசாலையொன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. தரம் 8 இல் கல்வி பயிலும், [...]

பாடசாலை மாணவர்களின் புத்தக பைகளை சோதனையிட தீர்மானம்பாடசாலை மாணவர்களின் புத்தக பைகளை சோதனையிட தீர்மானம்

பாடசாலை மாணவர்கள் பாடசாலைக்குள் போதைப் பொருட்கள் கொண்டுவருவதை தடுக்கும் வகையில் மாணவர்களின் புத்தக பைகளை பரிசோதனை செய்வதற்கான சுற்றுநிருபம் அடுத்த வாரத்திற்குள் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிறேமஜயந்த கூறியுள்ளார். முன்னதாக, பாடசாலை அபிவிருத்திக் குழு, பெற்றோர்கள், பழைய மாணவர்கள் [...]

கடற்கரையில் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்புகடற்கரையில் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்பு

அஹங்கம – வல்ஹெங்கொட கடற்கரையில் இன்று (7) காலை சடலமொன்று மிதப்பதாக அஹங்கம பொலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த நபர் அஹங்கம வவிலிஹேன பகுதியைச் சேர்ந்த 28 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக அஹங்கம கொன்னகஹஹேன [...]

செம்மணி படுகொலையின் 26ம் ஆண்டு நினைவேந்தல் இன்றுசெம்மணி படுகொலையின் 26ம் ஆண்டு நினைவேந்தல் இன்று

யாழ்.செம்மணி படுகொலையின் 26ம் ஆண்டு நினைவேந்தல் இன்று செம்மணியில் அனுட்டிக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசிய கட்சியின் ஏற்பாட்டில் இன்று காலை 10 மணியளவில் நினைவேந்தல் இடம்பெற்றது. நினைவேந்தலில் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், வடமாகாண சபை முன்னாள் உறுப்பினர் பா.கஜதீபன், தமிழ் தேசியக் [...]

அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 12 இந்திய மீனவர்கள் கைதுஅத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 12 இந்திய மீனவர்கள் கைது

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 12 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். முல்லைத்தீவு மற்றும் அலம்பில் கடற்கரையில் வைத்து குறித்த மீனவர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்தனர். அவர்கள் பயணித்த படகில் இருநடத மீன்பிடி உபகரணங்களையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். [...]

இன்றைய வானிலை விபரம்இன்றைய வானிலை விபரம்

சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி, நுவரெலியா, களுத்துறை, காலி [...]