நீர்வீழ்ச்சியில் விழுந்து இளைஞன் உயிரிழப்பு
ஹல்துமுல்ல உடவேரிய தோட்டத்தில் நீர்வீழ்ச்சியில் விழுந்து இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ஹல்துமுல்ல உடவேரிய தோட்டத்தின் சன்வெலி தோட்டப் பகுதியில் அமைந்துள்ள இந்த நீர்வீழ்ச்சியை பார்வையிட கடந்த வெள்ளிக்கிழமை (02) இளைஞர்கள் இருவர் சென்றுள்ளனர்.
நீர்வீழ்ச்சிக்கு அருகில் செல்ஃபி புகைப்படம் எடுக்கச் சென்ற போது இளைஞன் ஒருவர் தவறி நீர்வீழ்ச்சியில் விழுந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஹல்துமுல்ல பொலிஸ் அதிகாரிகள் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து மேற்கொண்ட தேடுதலின் போது விபத்து இடம்பெற்ற இடத்திலிருந்து சுமார் 200 மீற்றர் கீழே உள்ள குழி ஒன்றில் இருந்து இளைஞனின் சடலம் நேற்று (03) கண்டெடுக்கப்பட்டது.
வெலமிட்டியாவ குருதலாவ பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் ஹல்துமுல்ல பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.