காலை உணவின் அவசியமும் ஆபத்தும்

இமை வானொலியை கேட்க இங்கே அழுத்தவும்

நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடனும் ஆற்றலுடனும் இருக்க காலை உணவு மிகவும் அவசியம். காலையில் வயிறு வெறுமையாக இருக்கும் போது என்ன சாப்பிட்டாலும் அது நேரடியாக நம் வயிற்றின் உள் அடுக்கை பாதிக்கிறது.

இது வயிற்றில் எரிச்சல் உணர்வு, வயிற்று வலி, நெஞ்செரிச்சல், அஜீரணம் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்துவதால் உணவு வல்லுநர்கள் சில உணவுகளை காலையில் எடுத்துக் கொள்ளக் கூடாது என எச்சரிக்கின்றனர்.

வெறும் வயிற்றில் உட்கொள்ள கூடாதவை

நார்ச்சத்து வயிற்றுக்கு நல்லது. ஆனால் அதிக நார்ச்சத்து வயிற்றுக்கு தீங்கு விளைவிக்கும். இது வயிற்று வலி போன்ற சிக்கலகளை ஏற்படுத்தும். எனவே நார்ச்சத்து நிறைந்த உணவுகளை சீரான சரியான அளவில் உண்ண வேண்டும்.

காலையில் காரமான, மசாலா அதிகம் உள்ள மற்றும் பொரித்த உணவை சாப்பிடுவதைத் தவிர்க்கவும். ஏனெனில், இது வயிற்று எரிச்சல் மற்றும் அஜீரணத்தை ஏற்படுத்துவதோடு வயிறு மற்றும் மார்பில் அசௌகரியத்தை ஏற்படுத்தும்.

காலையில் வெறும் வயிற்றில் தேநீர் மற்றும் காபி அருந்துவதால் உடலுக்கு தீங்கு விளைவிப்பதோடு நெஞ்செரிச்சல் மற்றும் நீரிழப்பு பிரச்சனைகளையும் ஏற்படுத்தும்.

காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பது நன்மை பயக்கும். ஆனால் குளிர்சாதன பெட்டியில் இருந்து குளிர்ந்த நீரை குடிக்கக்கூடாது. இதன் காரணமாக செரிமான சக்தி குறையத் தொடங்குகிறது.

ஆல்கஹால் வெறும் வயிற்றில் அருந்த கூடாது. இது கல்லீரலில் அதிக அழுத்தம் ஏற்படுத்தும் என்பதோடு ஆல்கஹால் உங்கள் இரத்தத்தில் மிக வேகமாக பரவுகிறது.