இலங்கையில் 2000 க்கும் மேற்பட்ட பேக்கரிகள் பூட்டு
தற்போதைய சூழ்நிலையில் நாடளாவிய ரீதியில் 2000 க்கும் மேற்பட்ட பேக்கரிகள் மூடப்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
சந்தையில் ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை 350 ரூபாவாக அதிகரித்துள்ளது.
முன்னதாக ஒரு கிலோ கோதுமை மா ரூ.84க்கு விற்கப்பட்டது.
மொத்த விற்பனை சந்தையில், 50 கிலோ கோதுமை மா தற்போது 17,000 ரூபாவுக்கு மேல் விற்பனை செய்யப்படுவதாக அதன் தலைவர் என்.கே. ஜயவர்தன தெரிவித்தார்.