பெண்களுக்கு ஆபத்து விளைவிக்கும் கற்றாழை


சோற்று கற்றாழை என்று சொல்லப்படும் இந்த கற்றாழை (Aloe Vera) ஆரோக்கியத்தை அள்ளி வழங்கக் கூடியது. இது உடல் ஆரோக்கியம் மட்டுமல்லாமல் சருமம், கூந்தல் போன்றவற்றையும் அழகாக பராமரிக்க உதவுகிறது. இந்த கற்றாழையின் மருத்துவ குணங்களும் அழகு சார்ந்த பராமரிப்புகளும் மிகவும் சிறந்தவை என்பதில் மாற்று கருத்து ஏதும் இருக்க முடியாது. மருத்துவ குணங்கள் நிறைந்த, கற்றாழை சரும பராமரிப்பு மற்றும் ஆரோக்கியம் இரண்டுக்கும் சிறந்தது.

கற்றாழை அளவிற்கு அதிகமானால் உடலில் உள்ள பொட்டாசியம் அளவில் ஏற்றத்தாழ்வுகள் எற்படலாம். அதிக அளவில் கற்றாழை சாறு உட்கொள்வது உடலில் பொட்டாசியம் அளவைக் குறைக்கும் என்பதால், இதை அதிக அளவு பயன்படுத்துவது ஒழுங்கற்ற இதயத் துடிப்பு பிரச்சனையை ஏற்படுத்தக்கூடும். மேலும், கற்றாழையில் “லேடெக்ஸ்” காணப்படுகிறது. இதனால் சிலருக்கு ஒவ்வாமை (allergy) ஏற்படுகிறது. இது வயிற்று எரிச்சல், வயிற்று வலி போன்ற பல வயிற்று பிரச்சினைகளை ஏற்படுத்தும்.

கற்றாழை சாற்றை அதிக அளவிற்கு எடுத்துக் கொண்டால், நீரிழிவு நோயாளிகளுக்கு எலக்ட்ரோலைட் ஏற்றத்தாழ்வு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கிறது. நீரிழிவு நோயாளிகள் மருத்துவரின் ஆலோசனையின்றி கற்றாழை சாற்றை கண்மூடித்தனமாக பயன்படுத்தக்கூடாது.

கற்றாழையில் காணப்படும் பயோ ஆக்டிவ் காம்பௌண்டுகள் கல்லீரல் செயல்பாட்டில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், கல்லீரல் பிரச்சினை இருந்தால், மருத்துவரின் ஆலோசனையின்றி கற்றாழை சாற்றை அருந்தக் கூடாது என வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். அதோடு, கர்ப்பிணி பெண்கள் கற்றாழை சாறு குடிப்பதை தவிர்க்க வேண்டும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இது கருப்பை சுருக்கங்களை உருவாக்கும் என்பதால், பிரசவத்தில் சிக்கல்களை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *