சீனாவில் மிருகங்களிடமிருந்து பரவும் புதிய ‘வைரஸ்
கொரோனாவைப் போலவே, மிருகங்களிடமிருந்து மனிதா்களின் உடல்களில் உருமாறித் தாவிய ‘லாங்யா ஹெனிபாவைரஸ்’ என்ற புதிய தீநுண்மி, சீனாவில் பரவி வருவதாக தைவான் நோய்கள் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
அந்த நாட்டில் இதுவரை 35 பேருக்கு அந்த தீநுண்மி பரவியுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது; அந்தத் தீநுண்மியின் பரவும் திறன் பற்றி தீவிரமாக ஆய்வு செய்யப்படுகிறது என்று அந்த மையம் கூறியுள்ளது.