ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்தை பதவி விலகுமாறு கோரி ஆர்ப்பாட்டம்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பதவி விலகுமாறு கோரியும் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு தீர்வைப் பெற்றுத்தருமாறு கோரியும் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்வதை நிறுத்தக் கோரியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை உடனடியாக விடுவிக்குமாறு கோரியும் ஆர்ப்பாட்டமொன்று நேற்றைய தினம் முன்னெடுக்கப்பட்டது.
குறித்த ஆர்ப்பாட்டம் புத்தளம் ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக இடம்பெற்றதுடன் பல்வேறு தொழிற்சங்கங்கள் சிவில் அமைப்புக்கள் ஒன்றிணைந்து குறித்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.
ஜனாதிபதி பதவி விலக வேண்டுமென்றும் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு தீர்வைப் பெற்றுத் தருமாறு கோரியும், ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்வதை நிறுத்துமாறு கோரியும், கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்குமாறு கோரியும் பதாகைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.