யாழில் மீண்டும் இந்திய இழுவை படகுகள் அட்டகாசம்
யாழ்ப்பாணம் – சுழிபுரம் மேற்கு சவுக்கடி கடற்பரப்பில் (01-03-2023) கடற்றொழிலுக்கு சென்ற மூன்று மீனவர்களின் 12 இலட்சம் பெறுமதியான வலைகள் இந்திய இழுவைப் படகுகளால் அறுத்து நாசம் செய்யப்பட்டுள்ளதாக வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த இரு நாட்களுக்கு முன்னர் சுழிபுரம் திருவடி நிழலை கடற்பரப்பிலும் இவ்வாறானதொரு சம்பவம் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.