யாழ். கொக்குவிலில் எரிபொருள் வரிசையில் மோதல் – ஒருவர் காயம்
யாழ்.கொக்குவில் – குளப்பிட்டி பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தை அண்மித்த பகுதியில் நேற்று இரவு மோதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
எரிபொருள் பெறுவதற்கு வரிசையில் காத்திருந்தவர்களுக்கிடையில் உருவான வாய்த்தர்க்கம் பின்னர் மோதலாக மாறியுள்ளது.
இதன்போது கும்பல் ஒன்றின் தாக்குதலுக்கு இலக்கான நபர் ஒருவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
சம்பவம் தொடர்பாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதாகவும், பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்ததாகவம் சம்பவ இடத்திருந்த சிலர் தொிவித்தனர்.