நீரில் மூழ்கி பாடசாலை மாணவர்கள் இருவர் மரணம்
பேராதனை, நெல்லிகல குளத்தில் நீராடச் சென்ற பாடசாலை மாணவர்கள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
யட்டகலதென்ன பிரதேசத்தை சேர்ந்த 17 மற்றும் 18 வயதுடைய இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இவர்கள் நேற்று (20) மாலை நெல்லிகல குளத்தில் நீராடச் சென்ற போது நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர்.
பின்னர், பொலிஸ் அதிகாரிகளும், ராணுவ அதிகாரிகளும் சேர்ந்து நீரில் மூழ்கிய இருவரின் உடல்களையும் கண்டெடுத்தனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பேராதனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.