பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை
கொவிட் தொற்று மீண்டும் பரவி வரும் நிலையில், மக்கள் இது தொடர்பில் அதிக கவனம் செலுத்துமாறு பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
குறிப்பாக பாடசாலைகள், நிறுவனங்கள் மற்றும் கூட்டங்கள் இடம்பெறும் பகுதிகளில் இருந்து நோய் அறிகுறிகளுடன் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டு வருவதாக அதன் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.
ஆனால் இலங்கையில் உள்ள சுகாதார வைத்திய அதிகாரிகளின் அலுவலகங்களில் தொற்றாளர்களை உறுதிப்படுத்தும் அன்டிஜென் பரிசோதனை கருவிகள் இல்லை. எனவே, நோயாளிகளை கண்டறிவதில் கடும் சிக்கல்கள் உருவாகி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனவே, எதிர்வரும் இரு வாரங்களில் இலங்கையின் பல்வேறு பகுதிகளில் இருந்து கொவிட்-19 நோயாளர்கள் அடையாளம் காணப்படாமை, எரிபொருள் நெருக்கடி மற்றும் பொருளாதார நெருக்கடி போன்ற காரணிகளினால் இலங்கையில் அதிகளவான கொவிட் நோயாளிகள் பதிவாக வாய்ப்பு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.