எரிபொருள் நிரப்பு நிலையத்திற்குள் துப்பாக்கிச் சூடு
பதுளை, ஹிந்தகொட பிரதேசத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்குள் நபர் ஒருவர் வான் நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்.
நேற்று (27) இரவு 11.30 மணியளவில் இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்களை பயமுறுத்தும் நோக்கில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த துப்பாக்கிச்சூட்டில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் எவரும் கைது செய்யப்படவில்லை என்பதுடன், பதுளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.