பொலிஸாரின் துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி
இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களை கத்தியால் தாக்கிய நபர் ஒருவர் பொலிஸாரால் சுடப்பட்டுள்ளார்.
சம்பவத்தில் காயமடைந்த சந்தேக நபர் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த சந்தேக நபர் தலகஸ்பே பகுதியைச் சேர்ந்த 37 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று (23) பிடிகல, தலகஸ்பே மஹேன பகுதிக்கு முறைப்பாடு ஒன்று தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை சந்தேகநபர் தாக்கி காயப்படுத்தியுள்ளதுடன், இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள பிடிகல பொலிஸ் உத்தியோகத்தர்கள் சென்றிருந்தனர்.
அதன்போது சந்தேகநபரை கைது செய்ய சென்ற போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சந்தேகநபருக்கு எதிராக 9 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பான வழக்கு பலப்பிட்டிய நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
அத்துடன் நபர் ஒருவரை கூரிய ஆயுதத்தால் தாக்கி படுகொலை செய்தமை தொடர்பில் எல்பிட்டிய நீதிமன்றில் வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.