Day: July 24, 2022

கிளிநொச்சியில் வீதியோரத்தில் இருந்து பெண் சிசு மீட்புகிளிநொச்சியில் வீதியோரத்தில் இருந்து பெண் சிசு மீட்பு

கிளிநொச்சியில் பொது மக்களால் பெண் சிசுவொன்று உயிருடன் மீட்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி – அக்கராயன் குளம் பகுதியிலேயே இன்று (24) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. அக்கராயன் குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வன்னேரிக்குளம் பிரதான வீதியோரத்திலுள்ள வீடொன்றிற்கு முன்னாலிருந்தே சிசுவானது கண்டெடுக்கப்பட்டுள்ளது இதையடுத்து பொதுமக்கள் [...]

குரங்கம்மை காய்ச்சல் குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கைகுரங்கம்மை காய்ச்சல் குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

8 வயதுக்குட்பட்ட குழந்தைகள் குரங்கம்மை காய்ச்சலால் பாதிக்கப்படும் அபாயம் அதிகம் என அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் சுட்டிக்காட்டியுள்ளது. அதேபோல் புதிதாகப் பிறந்த குழந்தை உட்பட இரண்டு குழந்தைகள் குரங்கும்மை காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த மையம் இன்று உறுதிப்படுத்தியதாக [...]

யாழில் தொடரும் நெருக்கடி – தனியார் பேருந்து சேவைகளும் முடக்கம்யாழில் தொடரும் நெருக்கடி – தனியார் பேருந்து சேவைகளும் முடக்கம்

எரிபொருள் பெறுவதில் தொடரும் நெருக்கடி நிலையினால் யாழ்.மாவட்ட தனியார் பேருந்துகள் (உள்ளுர் – வெளியூர்) நாளை சேவையில் ஈடுபடாதென அறிவிக்கப்பட்டிருக்கின்றது. யாழ்.பிராந்திய கூட்டிணைக்கப்பெற்ற பஸ் கம்பனிகளின் இணைய அலுவலகத்தில் தனியார் பேருந்து சங்கங்களுடன் மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடலுக்கு பின்னர் யாழ்.மாவட்ட செயலாளருடன் கலந்துரையாடிய [...]

அரசு அலுவலகங்களுக்கு பணியாளர்களை அழைப்பதை மட்டுப்படுத்தும் உத்தரவு மேலும் நீடிப்புஅரசு அலுவலகங்களுக்கு பணியாளர்களை அழைப்பதை மட்டுப்படுத்தும் உத்தரவு மேலும் நீடிப்பு

அரசு அலுவலகங்களுக்கு அதிகாரிகளை அழைப்பதை கட்டுப்படுத்துவது குறித்து புதிய சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு, அரச அலுவலகங்களுக்கு பணியாளர்களை அழைப்பதை மட்டுப்படுத்தும் உத்தரவு மேலும் ஒரு மாதத்திற்கு அமுலில் இருக்கும் என பொது நிர்வாகம் மற்றும் உள்விவகார [...]

பொலிஸாரின் துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலிபொலிஸாரின் துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி

இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களை கத்தியால் தாக்கிய நபர் ஒருவர் பொலிஸாரால் சுடப்பட்டுள்ளார். சம்பவத்தில் காயமடைந்த சந்தேக நபர் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த சந்தேக நபர் தலகஸ்பே பகுதியைச் சேர்ந்த 37 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகின்றது. நேற்று (23) [...]

இருளில் மூழ்கப்போகும் இலங்கை – கைவிரித்த அதிகாரிகள்இருளில் மூழ்கப்போகும் இலங்கை – கைவிரித்த அதிகாரிகள்

நுரைச்சோலையில் இருக்கும் ஒரே ஒரு நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்திற்கு நீண்ட கால கடன் அடிப்படையில் நிலக்கரி விநியோகத்தைப் பெறுவதற்கு லங்கா நிலக்கரி நிறுவனம் மேற்கொண்ட நடவடிக்கைகள் தொடர்பில் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு கவலை வெளியிட்டுள்ளது. இலங்கையின் தற்போதைய கடுமையான [...]

ஒவ்வொரு கட்சியில் இருந்தும் ஒரு அமைச்சர்ஒவ்வொரு கட்சியில் இருந்தும் ஒரு அமைச்சர்

வெற்றிடமாகி இருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள அக்கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தனவுக்கு அமைச்சுப் பதவி வழங்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் வெற்றிடமாக இருந்த [...]

புகையிரத பாதையில் இரண்டு சடலங்கள் மீட்புபுகையிரத பாதையில் இரண்டு சடலங்கள் மீட்பு

அம்பேபுஸ்ஸ மற்றும் போதலே ஆகிய இரண்டு புகையிரத நிலையங்களுக்கு இடையிலான குறுகிய புகையிரத பாதையின் ஓரத்தில் இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக மீரிகம பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஓரளவு வயதான தோற்றமுடைய இருவரின் சடலங்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன எனவும் உயிரிழந்த இருவரும் சாரம் மற்றும் [...]

இலங்கை பொருளாதார நெருக்கடியினால் பாலியல் தொழில் ஈடுபடும் பெண்கள்இலங்கை பொருளாதார நெருக்கடியினால் பாலியல் தொழில் ஈடுபடும் பெண்கள்

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபடும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த ஜனவரி முதல் பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்கள் 30 சத வீதம் வரை அதிகரித்துள்ளனர். இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி சூழலால் அங்குப் [...]

பாடசாலைகள் நாளை மீண்டும் ஆரம்பம்பாடசாலைகள் நாளை மீண்டும் ஆரம்பம்

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் நாளை (24) மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதுதொடர்பாக கல்வி அமைச்சு 19.07.2022 அன்று வெளியிட்ட அறிக்கைக்கு அமைவாக மாகாணக் கல்விச் செயலாளர்கள், மாகாணக் கல்விப் பணிப்பாளர்கள், பிராந்தியக் கல்விப் பணிப்பாளர்கள், வலய பொறுப்பாளர், [...]

இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம்இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம்

சப்ரகமுவ மாகாணத்திலும் நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் ஏனைய [...]

இன்றைய தினத்திற்க்கான மின்வெட்டு தொடர்பான அறிவிப்புஇன்றைய தினத்திற்க்கான மின்வெட்டு தொடர்பான அறிவிப்பு

நாட்டில் இன்றைய தினம் 3 மணித்தியாலங்கள் மின் துண்டிப்பு அமுலாக்கப்படவுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அந்த ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இதற்கமைய, ABCDEFGHIJKLPQRSTUVW ஆகிய வலயங்களுக்குட்பட்ட [...]

தமிழர்கள் அனுபவித்த கொடுமையை உணர்ந்த சிங்கள இளைஞன்தமிழர்கள் அனுபவித்த கொடுமையை உணர்ந்த சிங்கள இளைஞன்

காலிமுகத்திடலில் நேற்று அதிகாலை கடற்படையினரின் கொடூர தாக்குதல் வடக்கு கிழக்கில் தமிழர்கள் எதிர்கொண்ட கொடூரத்தை உணர வைத்துள்ளது. நேற்று அதிகாலை காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கடற்படையினர் மிலேச்சத்தனமாக தாக்கப்பட்டதுடன், பலர் கைது செய்யப்பட்டிருந்தனர். இவ்வாறான தாக்குதலின் அடிப்படையில் காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டங்களின் [...]

பொலிஸ் அதிகாரியை தாக்க முயன்றவர் கைதுபொலிஸ் அதிகாரியை தாக்க முயன்றவர் கைது

மரம் அரிவதற்கு பயன்படுத்தப்படும் வாளை பயன்படுத்தி பொலிஸ் உத்தியோகஸ்த்தரை தாக்க முயற்சித்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் பிலியந்தலை பகுதியில் இடம்பெற்றுள்ளது. அங்குள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு மரம் அரியும் வாளுடன் வந்த நபர், பொலிஸ் அதிகாரியை தாக்க முயற்சிக்கும் சீ.சி.ரீ.வி [...]