13 வயது சிறுமி தாத்தா, மாமா மற்றும் சகோதரரால் பலாத்காரம்
13 வயது சிறுமியை அவளது தாத்தா, தாய் மாமன் மற்றும் மூத்த சகோதரன் பலமுறை துஷ்பிரயோகம் செய்துள்ளார்.
இச்சம்பவம் மொனராகலை எதிமலேயில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
வயிற்று வலி காரணமாக சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அப்போது, அவர் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் சிறுமியை அவரது தாத்தா, தாய் மாமன் மற்றும் சகோதரர் ஆகியோர் துஷ்பிரயோகம் செய்தது தெரியவந்தது.
இதையடுத்து சிறுமியை துஷ்பிரயோகம் செய்த அனைவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருவதாக தெரியவந்துள்ளது.