இருளில் மூழ்கப்போகும் இலங்கை – கைவிரித்த அதிகாரிகள்
நுரைச்சோலையில் இருக்கும் ஒரே ஒரு நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்திற்கு நீண்ட கால கடன் அடிப்படையில் நிலக்கரி விநியோகத்தைப் பெறுவதற்கு லங்கா நிலக்கரி நிறுவனம் மேற்கொண்ட நடவடிக்கைகள் தொடர்பில் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு கவலை வெளியிட்டுள்ளது.
இலங்கையின் தற்போதைய கடுமையான பொருளாதார நிலைமையைக் கருத்தில் கொண்டு, நீண்ட கால கடனில் நாட்டிற்கு உதவ எந்தவொரு சப்ளையர் முன்வருவார்களா என்பது நிச்சயமற்றது என்று பயன்பாட்டு ஒழுங்குமுறை ஆணையம் குறிப்பிட்டுள்ளது.
இலங்கையில் 900 மெகாவாட் ‘உறுதியான மின்சாரத்தை’ முழுமையாக நம்பியிருப்பதால், நிலக்கரி வழங்குநரையும் தேவையான நிதியையும் விரைவில் கண்டுபிடிப்பது மிகவும் முக்கியம் என்று இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தலைவர் ஜானக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
“நாம் தேவையான நிலக்கரி இருப்புகளைப் பெறாவிட்டால், நாடு கடுமையான மின் நெருக்கடியில் மூழ்கிவிடும், அங்கு இந்த ஆண்டு இறுதியில் ஒரு நாளைக்கு குறைந்தது 15 மணிநேர மின்வெட்டுகளை விதிக்க வேண்டியிருக்கும்” என்று ரத்நாயக்க வலியுறுத்தினார்.
மேலும் நிலக்கரி விநியோகத்திற்கான டெண்டர் திறக்கப்பட்டுள்ளதாகவும், ஓகஸ்ட் 10 ஆம் திகதியுடன் முடிவடையும் என்றும் இலங்கை மின்சார சபையின் தலைவர் என்.எஸ்.இளங்ககோன் தெரிவித்தார்.