வாகன வருமான உத்தரவு பத்திர விநியோகம் நிறுத்தம்
தென் மாகாணத்தில் வாகன வருமான உத்தரவு பத்திர விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படவுள்ளது.
தென் மாகாண பிரதம செயலாளர் சுமித் அழககோன் அறிக்கையொன்றை வௌியிட்டு இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன்படி, வாகன வருமான உத்தரவு பத்திரம் வழங்கும் புதிய முறைமையை அறிமுகப்படுத்தும் வகையில், நாளை (27) முதல் ஒக்டோபர் 2 ஆம் திகதி வரை தென் மாகாண மோட்டார் போக்குவரத்து திணைக்களம் மற்றும் தென் மாகாணத்தின் அனைத்து பிராந்திய செயலகங்கள் ஊடாக வாகன வருமான உத்தரவு பத்திரங்கள் விநியோகிக்கப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஒன்லைன் முறை மூலம் வாகன வருமான உத்தரவு பத்திரம் பெறுவது செப்டம்பர் 24ஆம் திகதி நள்ளிரவு 12 மணி முதல் ஒக்டோபர் 6ஆம் திகதி நள்ளிரவு 12 மணி வரை நிறுத்தப்பட்டுள்ளது.
வாகன வருமான உத்தரவு பத்திரம் விநியோகிக்கப்படாததால் வாகன உரிமையாளர்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களை தடுக்கும் வகையில் நாளை முதல் ஒக்டோபர் 6ம் திகதி வரை காலாவதியாகும் வாகன வருமான உத்தரவு பத்திரங்களுக்கு அபராதம் வசூலிப்பதில்லை என முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை, மத்திய மாகாணத்தில் வாகன வருமான உத்தரவு பத்திர விநியோகமும் நாளை (27) முதல் ஒக்டோபர் 2 ஆம் திகதி வரை இடைநிறுத்தப்படவுள்ளது.