தலைமன்னார் கடலில் மீன்பிடிக்காகச் சென்ற 3 மீனவர்களை காணவில்லை


தலைமன்னார் பியரிலிருந்து ஒரு படகில் மீன் பிடிக்காக கடலுக்குச் சென்ற மீனவர்கள் மூவரை காணவில்லையென இவர்கள் தேடப்பட்டு வருவதுடன் இவர்களைப்பற்றி இதுவரை எங்கிருந்தும் தகவல்கள் வரவில்லையெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைமன்னார் பியரைச் சார்ந்த மூன்று மீனவர்கள் ராசதுரை இராசசேகர் (வயது 52) ராஜமூர்த்தி மோகன்ராஜ் (வயது 50) ராஜி ஜனாத் (வயது 27) ஆகிய மூவரும் வழமைபோன்று தலைமன்னார் பியர் துறையிலிருந்து வட கடலில் வலிச்சல் வலை மீன் பிடிக்காக வியாழக்கிழமை (14.07.2022) பிற்பகல் ஒரு மணியளவில் ஒரு வெளிக்கள இயந்திரப் படகில் (படகு இல. ஓஎவ்ஆர்பி-ஏ-4138 எம்என்ரி) புறப்பட்டுச் சென்றுள்ளனர்.

இவர்கள் அன்று வழமைபோன்று கரை திரும்பாததால் இப் பகுதி மீனவர்களும் கடற்படையினரும் வெள்ளிக்கிழமை (15.07.2022) தொடக்கம் இன்று வரை தேடுதலில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆனால் சனிக்கிழமை (16.07.2022) வரைக்கும் இவர்களையோ இவர்கள் சென்ற படகையோ இதுவரை கண்டு பிடிக்கப்படவில்லையென தெரிவிக்கப்படுகின்றது

கடந்த ஓரிரு தினங்களாக இவ் பகுதியில் பலத்த காற்று வீசியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *