விக்னேஷ் சிவன் – நயன்தாரா திருமண ஒப்பந்தம் ரத்து

இமை வானொலியை கேட்க இங்கே அழுத்தவும்

நடிகர், பாடலாசிரியர், இயக்குனர் என பன்முகத்திறமை கொண்ட விக்னேஷ் சிவனும், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையான நயன்தாராவும் கடந்த ஆறு வருடங்களாக காதலித்து வந்ததை அடுத்து இவர்களது திருமணம் ஜூன் 9-ஆம் தேதி சென்னை மகாபலிபுரத்தில் உள்ள ஷேர்டன் ஹோட்டலில் குடும்ப உறவினர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.

இவர்களது திருமண விழாவில் ஷாருக்கான், ரஜினிகாந்த் உள்ளிட்ட பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் பல கட்டுப்பாடுகளுடன் நடைபெற்ற இவர்களது திருமணத்தை பிரபல ஓடிடி நிறுவனம் ஒளிப்பரப்பு செய்வதாக தெரிவித்திருந்தனர்.

மேலும், இதன் பொறுப்பு பிரபல இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனனிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்நிலையில், பிரபல ஓடிடி நிறுவனம் அதிரடி முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

அதாவது, திருமணம் முடிந்த பின்னர் இயக்குனர் விக்னேஷ் சிவன் சில புகைப்படங்களை ஊடகங்களுக்கு பகிர்ந்திருந்தார்.

அதன் பின்னர், சில புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டதாக கூறப்படுகிறது.

நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணம் இதனால் ஓடிடி நிறுவனம் தங்களுடைய அனுமதி இல்லாமல் புகைப்படங்களை பகிர்ந்தது ஒப்பந்தத்தை மீறியதாக கருதி ஒப்பந்தத்தை ரத்து செய்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.