போராட்டக்காரர் போர்வையில் நாசவேலை செய்யும் காடையர் கூட்டம்
மக்கள் போராட்டத்தை திசைதிருப்ப நாடாளுமன்ற பகுதியில் போராட்டக்காரர் போர்வையில் களமிறக்கப்பட்டுள்ள வேறோரு குழு அட்டகாசம் என்று காலிமுகத்திடல் போராட்டக் குழு அறிவித்துள்ளது.
எனவே நாடாளுமன்றப்பகுதிக்கு யாரும் செல்ல வேண்டாம் என்று காலிமுகத்திடல் வரும் படி உணர்வுள்ள மக்களுக்கு காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஜூலை 13ஆம் திகதி ஜனாதிபதி பதவியிலிருந்து கோத்தாபய ராஜபக்ச விலகுவதாக அறிவித்தார் என்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபயவர்த்தன ஜூலை 9ஆம் திகதி அறிவித்த போதும் ஜூலை 14ஆம் திகதி மலர்ந்துள்ள நிலையில் அவரது பதவி விலகல் கடிதம் வெளியிடப்படவில்லை.
இந்த நிலையில் உணர்வுள்ள மக்கள் போராட்டத்தை குழப்ப சூழ்ச்சி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.