கோட்டாபயவின் மாளிகையை நோக்கி நகரும் மிகபெரும் கூட்டம்


ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மாளிகை நோக்கி ஒரு கூட்டம் நகர்ந்தபடி இருக்கிறது. அந்த நகர்வு “The End Game” என்று பெயரிடப்பட்டுள்ளது.

இது ஒரு சாதாரணமான நகர்வல்ல பஞ்சத்தை எதிர்கொண்டுள்ள ஒரு படித்தகூட்டத்தின் வெறிகொண்ட நகர்வு.

கண்ணீர்புகைக்குண்டுகள் வெடிக்க, நீர்த்தாரையடிக்க தடியடியெல்லாம் தாண்டி பின்வாங்காமல் நகர்ந்துகொண்டே இருக்கிறது அந்தக்கூட்டம்.

நான் உறுதியாகச் சொல்கிறேன் இந்தக்கூட்டம் சுட்டாலும் பின்வாங்காது. ஒரு முடிவோடு நடந்துகொண்டிருக்கிறார்கள். இப்படி நகரும் இந்தப்போராட்டககாரர்களின் தொகை நாளை இரண்டு லட்சத்தை தாண்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

சஜித் அணி, மனோ அணி, அனுர கூட்டம் பொதுமக்கள் அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் என்று பட்டாளம் பெரியது.

நீர்த்தாரையை பொலீஸார் இரக்கமின்றி அடிக்கிறார்கள் வழமையாக இப்படியான சந்தர்ப்பத்தில் என்ன நடக்கும்? ஒவ்வொருவரும் சிதறி தனித்தனியாக ஓடுவார்கள் ஆனால் இங்கு அனைவரும் கைகளை கோர்த்து கட்டிப்பிடித்தபடி மனித அரண்களை உருவாக்குகின்றார்கள்.

நம்பக்கடினாமான சினிமாப் பாணியை மிஞ்சிய ஆக்ஷ்ன் காட்சிகள் அரங்கேறுகின்றன.

இது இதுவரை உலகம்காணாத விசித்திரப்போர். ஒருபுறம் அவர்களின் நேற்றைய கதாநாயகன் இன்றைய வில்லனாக. மறுபுறம் நேற்றைய ஏமாளிகள் இன்று ஓரளவு விளிப்படைந்த ஹுரோக்களாக. குறித்த கருத்துக்களை முகநூலில் Umakaran rasaiya என்ற நபர் பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *