சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகள் வெற்றி


இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வினை காண்பதற்கு சர்வதேச நாணய நிதியத்துடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடிந்துள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று (05) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகளின் முன்னேற்றம் குறித்து அவர் இன்று பாராளுமன்றில் விசேட உரையொன்றை ஆற்றினார்.

இதன் போது, ​​ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் சபையில் இருந்ததால், எதிர்க்கட்சி உறுப்பினர்களின் அமளியால் சபாநாயகர் சபையை 10 நிமிடங்களுக்கு ஒத்திவைத்தார்.

மேலும் உரையாற்றிய பிரதமர்,

சர்வதேச நாணய நிதியத்துடன் நாங்கள் நடத்திய பேச்சுவார்த்தைகளை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்ல முடிந்தது. திவாலான நாடாகவே பேச்சுவார்த்தையில் பங்கேற்கிறோம்.

எனவே, சாதாரண அளவிலான பேச்சுவார்த்தைகளை விட கடினமான மற்றும் சிக்கலான சூழலை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இந்தப் பயணம் முன்பு போல் எளிமையான நேரியல் பயணம் அல்ல. பிரமை வழியாக ஒரு பயணம்.

ஆனால் அந்த சிரமங்களுக்கு மத்தியில் பேச்சுவார்த்தையை முடித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. சர்வதேச நாணய நிதியத்தின் உத்தியோகபூர்வ அறிவிப்பின்படி, பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் ஆதரிக்கப்பட வேண்டிய சீர்திருத்தங்கள் குறித்து நேர்மறையான மற்றும் ஆக்கப்பூர்வமான விவாதம் நடைபெற்றது.

அடுத்த கட்டமாக கடன் மறுசீரமைப்பு மற்றும் கடன் நிலைத்தன்மை குறித்த திட்ட அறிக்கையை அவர்களுக்கு வழங்க வேண்டும் ஆகஸ்ட் மாதத்திற்குள் நாங்கள் ஊழியர் மட்ட ஒப்பந்தத்தை எட்ட முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *