பாதுகாப்பு அமைச்சு மக்களிடம் விசேட கோரிக்கை
பயங்கரவாத தாக்குதல் ஒன்றோ அல்லது நாசகார செயல் ஒன்றோ இடம்பெறலாம் பொலிஸ்மா அதிபர் பாதுகாப்பு செயலாளருக்கு அறிவித்துள்ள கடிதம் ஒன்று பரவலாக பகிரப்பட்டு வரும் நிலையில் அது தொடர்பில் மக்கள் வீணாக அச்சமடைய தேவையில்லை என பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
தேசிய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இவ்வாறு மக்கள் குறித்த தகவல் தொடர்பில் அச்சமடைய வேண்டியதில்லை எனவும் கிடைக்கப்பெற்றுள்ள தகவல் தொடர்பில் பூரண விசாரணையொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.