10 வயது சிறுமி துஷ்பிரயோகம் – ஆசிரியர் கைது
ஹொரவபொத்தானை பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கூறியள்ள பொலிஸார் சந்தேக நபருக்கு அதே வயதுடைய ஒரு மகளும் இருப்பதாக தெரிவிக்கின்றனர்.
சந்தேகத்தில் கைதான ஆசிரியர் நடத்திய பயிற்சி வகுப்பில் துஷ்பிரயோகத்துக்குள்ளான சிறுமியும் கலந்து கொண்டதாகவும், இதன்போதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தான் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டமையை சிறுமி வீட்டுக்கு வந்து பெற்றோரிடம் கூறியதாகவும் சிறுமியின் பெற்றோர் சட்ட நடவடிக்கை எடுக்காமல் அமைதி காத்ததாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.