யாழ். மாவட்ட மக்களுக்கு பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் விடுத்துள்ள அறிவிப்பு
யாழ்.மாவட்டத்தில் வாகனங்கள் மூலம் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகள் இனிமேல் விற்பனை செய்யப்படாது. என மாவட்ட பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளர் பாஸ்கரன் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி காரணமாக பேக்கரி உற்பத்தியாளர்கள் தமது உற்பத்திகளை வீடுகளுக்கு கொண்டு சென்று விற்பனை செய்ய முடியாதுள்ளது.
ஆகவே பொதுமக்கள் தமது பகுதிகளில் உள்ள வெறுப்பாகங்களுக்கு நேரடியாக சென்று தமக்கான பொருட்களை பெற்றுக் கொள்ளுமாறு அவர் மேலும் தெரிவித்தார்.