வீடொன்றினுள் பெண் ஒருவர் மர்மமான முறையில் மரணம்
கிரிந்திவெல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மிவிதிகம்மன, ஊராபொல பிரதேசத்தில் வீடொன்றினுள் பெண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
கிரிந்திவெல பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து இது தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
உயிரிழந்தவர் 35 வயதுடைய பெண் என தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழந்த பெண் தனது குழந்தை, கணவரின் தாய் மற்றும் தந்தையுடன் அந்த வீட்டில் வசித்து வந்துள்ளார்.
உயிரிழந்த பெண்ணின் கணவர் வெளிநாட்டில் வசிப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்த பெண் வீட்டில் தனியாக இருந்த போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொலைக்கான காரணம் அல்லது சந்தேக நபர் தொடர்பில் இதுவரை எவ்வித தகவலும் வெளியாகவில்லை என்பதுடன், கிரிந்திவெல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்