எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மக்களை கடுமையாக தாக்கும் பொலிசார்
இலங்கையில் எரிபொருளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் மக்கள் நாட்கணக்காக காத்திருந்து எரிபொருளை பெறவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் பொலிஸார் மக்களை கடுமையாக தாக்கும் காணொளி ஒன்று வெளியாகியுள்ளது.
மக்கள் கால்கடுக்க காத்திருந்த நிலையில் அவர்கள்மீது பொலிஸாரின் இவ்வாறான காட்டுமிராண்டித்தனமான தாக்குதலுக்கு பலரும் விசனங்களை வெளியிட்டுள்ளனர்.