10ம் திகதிவரை எரிபொருள் விநியோகம் இல்லை – அரசாங்கம் அதிரடி தீர்மானம்
நாடு முழுவதும் இன்று 28ம் திகதி தொடக்கம் 10ம் திகதி வரையில் அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டும் எரிபொருள் விநியோகம் இடம்பெறும். பொதுமக்களுக்கு வழங்கப்படாது என அரசாங்கம் அறிவித்துள்ளது.
எதிர்வரும் 10ஆம் திகதி வரை சுகாதாரம், பாதுகாப்பு, மின்சாரம் மற்றும் ஏற்றுமதி துறைகளுக்கு மட்டுமே எரிபொருள் விநியோகிக்கப்படும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார்.
இந்த காலப்பகுதியில் பொதுமக்களுக்கு (தனியார் வாகனங்களுக்கு) எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் வழங்கப்பட மாட்டாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்தியாவசிய சேவைகளுக்கான எரிபொருள் விநியோகம் இலங்கை போக்குவரத்து சபை டிப்போக்கள் மற்றும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மேற்கொள்ளப்படும் என அவர் குறிப்பிட்டார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி தொடர்பில் இன்று (27) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டதாகவும்,
இதன்படி அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் எரிபொருளை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.