வடபிராந்திய இ.போ.ச சேவைகள் முடக்கம் – மக்கள் அந்தரிப்பு
வடபிராந்திய இ.போ.ச ஊழியர்கள் தமக்கான எரிபொருள் வழங்கப்படாமை தொடர்பில் அதிருப்தியை வெளிப்படுத்தும் முகமாக இன்றைய தினம் பணிப் புறக்கணிப்பு போராட்டத்தை நடாத்திவருகின்றனர்.
இதனால் வழமையான பேரூந்து சேவைகள் பல இடம்பெறவில்லை.மேலும் யாழ்.மத்திய பேரூந்து நிலையமும் இன்று காலை வெறிச்சோடிய நிலையில் காணப்பட்டிருக்கின்றது.
இதனால் வெளிமாவட்டங்களுக்கு செல்லும் பயணிகள் மிகவும் அசௌரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர். இ.போ.ச ஊழியர்களுக்கு அடுத்துவரும் 3 நாட்களுக்குள் எரிபொருள் வழங்கப்படும்.
என ஆளுநர் உத்தரவாதம் வழங்கியிருந்த நிலையில், ஊழியர்களை கடமைக்கு வருமாறு வடபிராந்திய முகாமையாளர் அழைப்பு விடுத்திருந்தார். ஆனாலும் இன்று சேவைகள் இடம்பெறவில்லை.