இயக்கச்சி பகுதியில் ஆட்டோ மீது மோதிய பேருந்து – சாரதி படுகாயம்
இயக்கச்சி பகுதியில் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு சென்ற ஆட்டோ மீது பேருந்து மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றிருக்கின்றது. யாழ்ப்பாணத்திலிருந்து திருகோணமாலை சென்ற பேருந்தும்,
வடமராட்சி கிழக்கு ஆழியவளையிலிருந்து எரிபொருள் நிரப்ப சென்றிருந்த ஆட்டோவும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது.
இந்த சம்பவத்தில் ஆட்டோ சாரதி படுகாயமடைந்த நிலையில் பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு
பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றார்.
சம்பவம் தொடர்பில் பளை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.