முல்லைத்தீவில் சட்டவிரோத மீன்பிடி – 3 படகுகள் 9 மீனவர்கள் கைது

26.04.23 அன்று இரவு முல்லைத்தீவு நாயாறு கடற்பரப்பில் சட்டவிரோத கடற்தொழில் நடவடிக்கையில் ஈடுபட்ட மூன்று படகுகளையும் அதில் இருந்த 9 மீனவர்களையும் கடற்படையினர் கைதுசெய்துள்ளார்கள்.
முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழில் நீரியல்வளத்திணைக்களத்தினரும் கடற்படையினரும் இணைந்து நடத்திய இந்த சோதனை நடவடிக்கையின் போது நாயாறு கடற்பரப்பில் சுருக்குவலையினையும் ஒளிபாச்சி பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட மூன்று படகுகளை கைதுசெய்துள்ளார்கள்.
இதில் கைதான 2 மீனவர்கள் கொக்கிளாய் பகுதியினை சேர்ந்தவர்களும் 7 மீனவர்கள் முல்லைத்தீவு தீர்த்தக்கரை பகுதியினை சேர்தநவர்ளும் என விசாரணையில் தெரியவந்துள்ளது.
கைதான மீனவர்களையும் சான்று பொருட்களையும் இன்று 27.04.23 முல்லைத்தீவு மாவட்ட நீதனான் நீதிமன்றில் கடற்தொழில் நீரியல்வளத்திணைக்களம் முன்னிலைப்படுத்தியபோது மீனவர்களை தலா ஒரு இலட்சம் ரூபா பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக கடற்தொழில் நீரியல் வளத்திணைக்களம் தெரிவித்துள்ளது.
Related Post

2023 ஆம் ஆண்டுக்கான பாதீட்டின் வாக்கெடுப்பு இன்று
2023 ஆம் ஆண்டுக்கான பாதீட்டின், குழுநிலை விவாதம் எனப்படும் 3ஆம் வாசிப்பு மீதான [...]

ரயிலில் கடத்தப்பட்ட சிறுமி – கடத்தல்காரன் கைது
ரயிலில் காணப்பட்ட சிறுமி அச்சத்துடன் காணப்பட்டதை அவதானித்த சிலர் பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் [...]

தண்டவாளத்தில் பேருந்தை இயக்கிய சாரதி கைது
ரயில் தண்டவாளத்தில் பேருந்தை இயக்கிய சம்பவம் தொடர்பில் அதன் சாரதி பொலிஸாரால் செய்யப்பட்டுள்ளார். [...]