அவுஸ்திரேலியாவுக்குச் செல்லமுயன்ற மேலும் 35 பேர் அதிரடி கைது
கடல் வழியாக சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவுக்குச் செல்லமுயன்ற மேலும் 35 பேர் கடற்படையினரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்நிலையில் பல நாள் மீன்பிடி படகின் ஊடாகவே அவர்கள் அவுஸ்திரேலியாவுக்குச் செல்ல முயன்றுள்ளனர். பாணந்துரை பிரதேசத்திலுக்கு அப்பாலுள்ள கடற்பரப்பில் வைத்தே இவர்கள் கைது செய்யப்பட்டள்ளனார்.
அதில் ஆண்கள் 25 பேர், பெண்கள் நால்வர் மற்றும் சிறுவர்கள் அறுவரும் அடங்குகின்றனர். இதன்போது ஆட்கடத்தல் வர்த்தகத்துடன் தொடர்புடைய ஐவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
6 வயதுக்கும் 56 வயதுக்கும் இடைப்பட்ட இவர்கள், திருகோணமலை, மன்னார், மட்டக்களப்பு, நீர்கொழும்பு, கற்பிட்டி மற்றும் நுவரெலியா ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது என கடற்படையினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.