யாழில் 12 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை – ஆசிரியர் கைது
யாழ்ப்பாணம் தீவகத்திலுள்ள பாடசாலையொன்றில் கல்வி கற்கும் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார் என்ற குற்றச்சாட்டில் 42 வயதான ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
தரம் 7 இல் கல்வி கற்கும் 12 வயதான மாணவிக்கே ஆசிரியர் இவ்வாறு பாலியல் தொல்லை கொடுத்தார் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மாணவி தன் தாயாரிடம் முறையிட்டுள்ளார். பாடசாலை அதிபரிடம் முறையிடப்பட்ட போது உரிய நடவடிக்கை எடுக்காததையடுத்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறித்த ஆசிரியர் கடந்த திங்கட்கிழமை கைது செய்யப்பட்டு, செவ்வாய்க்கிழமை ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார். அவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது.
கைதான ஆசிரியர் ஏற்கனவே வலிகாமத்தில் பாடசாலையொன்றில் கல்வி ஆசிரியராக கடமையாற்றும் போது சில மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
எனினும், பாதிக்கப்பட்ட மாணவிகள் நீதிமன்றத்தில் சாட்சியமளிக்க முன்வராததையடுத்து அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு, அவர் மீளவும் ஆசிரியர் சேவையில் இணைக்கப்பட்டிருந்தார்.