ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்லறை கண்டுபிடிப்பு
தென் அமெரிக்க நாடான பெருவில் வீட்டினுள் புதைந்து கிடந்த ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்லறையை ஆராய்ச்சியாளர்கள் கண்டெடுத்து உள்ளனர்.
கல்லறையில் இருந்த உடலைச் சுற்று சில்வர் மற்றும் தாமிரம் உலோகம் கொண்டு போர்த்தப்பட்டு இருந்ததாகவும், இன்கா பேரரசை சேர்ந்த செல்வ செழிப்புடையை குடும்பத்தை சேர்ந்தவராக இருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
வீட்டு பராமரிப்பு பணியின் போது கல்லறை கண்டெடுக்கப்பட்ட நிலையில், சுற்றுவட்டார பகுதிகளில் இன்கா பேரரசின் எச்சங்கள் உள்ளதா என ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.