வைத்தியசாலையில் ஆடை மாற்றிய தாதி – வீடியோ எடுத்தவர் கைது
காலி – உடுகம பிரதேசத்தில் வைத்தியசாலை ஒன்றின் குளியலறையில் ஆடை மாற்றிக்கொண்டிருக்கும் தாதியை கையடக்க தொலைபேசியில் காணொளி எடுத்ததாக குற்றம்சாட்டப்பட்ட குறித்த வைத்தியசாலை பணியாளர் உடுகம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டடவர் வைத்தியசாலையில் பணிபுரியும் பணியாளரான காலி – வலஹந்துவ பிரதேசத்தைச் சேர்ந்த 40 வயதுடையவராவார்.
பாலியல் துஷ்பிரயோக குற்றத்தின் கீழ் கைது செய்யப்பட்ட இவர் உடுகம நீதிவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்ப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.