உலக சாதனை படைத்த இரண்டரை வயது இலங்கைச் சிறுவன்


சர்வதேச சாதனை புத்தகத்தில் இரண்டரை வயது இலங்கைச் சிறுவன் ஒருவர் இடம்பிடித்துள்ளார். இதன்மூலம் அரபு நாடுகளின் கொடிகளையும், பெயர்களையும் அடையாளம் காணும் முதலாவது சிறுவன் எனும் உலக அந்தஸ்தை தனதாக்கிகொண்டார்.

கேகாலை மாவட்டம் தல்கஸ்பிடிய என்ற பகுதியைச் சேர்ந்த இரண்டரை வயதான நுஹான் நுஸ்கி எனும் சிறுவன் உலக சாதனை படைத்துள்ளார். நுஹான் நுஸ்கி 19 வினாடிகளில் அனைத்து அரபு நாடுகளின் கொடிகளையும், பெயர்களையும் அடையாளம் கண்டு சர்வதேச சாதனை புத்தகத்தில் (International Book of Records) தனது பெயரினை பதிவு செய்துள்ளார்.

ஏற்கனவே இதையே சாதனையை நிகழ்த்தி ஆசிய சாதனை புத்தகத்தில் தன் பெயரை பதிவு செய்த இச் சிறுவன் அண்மையில் உலக சாதனைக்கு விண்ணப்பித்த நிலையில் இவரது திறமையை பரிசீலனை செய்து உலக சாதனை சிறுவனாக தமது இணையத்தளத்தில் வெளியிட்டது. அத்துடன் தற்போது நுஹான் நுஸ்கிக்கான பரிசில்கள், பதக்கங்கள் என்பன வீடு வந்து சேர்ந்துள்ளன.

முஹம்மட் நுஸ்கி, பாத்திமா ரஸீனா ஆகிய தம்பதிகளின் செல்வப் புதல்வனான இச்சிறுவன் இரண்டு வயதில் இந்த சாதனையை நிகழ்த்தி இருப்பதுடன் தனது ஊரில் இவ்வுலக சாதனை நிகழ்த்திய முதலாவது சிறுவனாகவும் உள்ளார்.

அதேவேளை சிறுவன் நுஹான் நுஸ்கி சென்ற வருடம் எ.எம்.ஆர் டோக் அமையத்தின் மூலம் சிறந்த தேர்ச்சி மிக்க குழந்தை என தேசிய அளவில் தெரிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *