வவுனியாவில் வெளியே சென்ற கணவன் – தூக்கில் தொங்கிய மனைவி

செட்டிகுளம் – நேரியகுளம் பகுதியில் வீட்டில் இருந்து பெண் ஒருவரின் சடலம் செட்டிகுளம் பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது.
இன்று (18) பிற்பகல் குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
வவுனியா, செட்டிகுளம், நேரியகுளம் கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட சின்னக்குளம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் கணவன், மனைவி ஆகிய இருவரும் வசித்து வந்த நிலையில் கணவன் வீட்டில் இருந்து தேவை நிமிர்த்தம் காலையில் வெளியில் சென்றுள்ளார்.
வெளியில் சென்ற கணவன் காலை 11 மணியளவில் வீட்டிற்கு வந்த போது வீட்டில் மனைவி தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டுள்ளார். இதனையடுத்து அயலவர்களின் உதவியுடன் பொலிசாருக்கு கணவனால் தகவல் வழங்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிசார் குறித்த பெண்ணின் சடலத்தை மீட்டுள்ளனர்.
ஜேசுதாசன் மெட்டிலம்மா என்ற 57 வயதுடைய பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார். இது குறித்து செட்டிகுளம் பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Related Post

வவுனியாவில் மாணவனை தினமும் கொடூரமாக தாக்கிய ஆசிரியர்
வவுனியா நகர பிரபல பாடசாலை ஒன்றில் மாணவன் ஒருவர் மீது ஆசிரியர் தாக்கியதில் [...]

யாழ் வடமராட்சி கிழக்கில் இளைஞன் சடலமாக மீட்பு – மரணத்தில் சந்தேகம்
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு போக்கறுப்பு கிராம சேவகர் பிரிவிலுள்ள நித்தியவெட்டை பகுதியில் ஆண் [...]

அலுவலக நேரத்தில் அலைபேசி பாவித்தால் நடவடிக்கை
அலுவலக நேரத்தில் அலைபேசிகளைப் பயன்படுத்தி நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்றும் அரச ஊழியர்கள் [...]