கோட்டபாய ராஜபக்ஷவின் வீடு மீண்டும் முற்றுகை – ராணுவத்தை இறக்க திட்டம்
கோட்டபாய ராஜபக்ஷவின் வீடு, இன்று(20) அதிகாலை மீண்டும் முற்றுகைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. பல நூறு சிங்கள மக்கள் திரண்டு சென்று அவரது வீட்டை முற்றுகையிட்டுள்ள அதேவேளை. கொழும்பு மற்றும் ஏனைய இடங்களில் ராணுவத்தின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இன்று முதல் மேலும் 3 நாட்களுக்கு பெற்றோல் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளதோடு.
எரி வாயுவும் நாட்டில் தீர்ந்து விட்டது. இதனை அடுத்து பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில். நாட்டை லாக் டவுன் ஒன்றுக்குள் கொண்டு வர கோட்டபாய ஆலோசனை நடத்தி வருகிறார். இதோ ரணில் அரசு வந்து விட்டது. சர்வதேசம் உடனே உதவிகளை வாரி வழங்கும் என்று கூறப்பட்டது. ஆனால் சர்வதேச நாணய நிதியம் தாம் உதவி செய்வது என்றால், சில கட்டுப்பாடுகளை போட்டது. குறைந்த பட்சம் …
அந்த கட்டுப்பாடுகள் எதனையும் இலங்கை அரசு ஏற்க்க தயாராக இல்லை. இதனால் நாணய நிதியம் கையை விரித்து விட்ட நிலையில். தற்போது மாத முடிவில் இலங்கை பல நாடுகளுக்கு வட்டி கட்டவேண்டிய சூழ் நிலையில் உள்ளது. இதனை அடுத்து எஞ்சியுள்ள கொஞ்ச அமெரிக்க டாலர்களையும் இலங்கை இழக்கவேண்டிய சூழ் நிலையில் உள்ளது.
ரணில் விக்கிரமசிங்க அரசு, இது வரை எந்த ஒரு உருப்படியான வேலையையும் செய்யவில்லை. வெறும் வாய் பேச்சில் காலத்தை கழித்துக் கொண்டு இருக்கிறது. இன் நிலை நீடித்தால்க், நாடு தானாகவே லாக் டவுன் நிலைக்கு சென்று விடும் என்று கூறப்படுகிறது.