திடீர் சுகயீனம் 42 மாணவர்கள் வைத்தியசாலையில்

திடீர் சுகயீனமடைந்த 42 மாணவர்கள் கொட்டகலை வைத்தியசாலையில் இன்று காலை அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பத்தனை தமிழ் வித்தியாலய மாணவர்களே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தரம் 6 தொடக்கம் 11ஆம் தரம் வரை கல்வி கற்கும் 13 மாணவர்களும் 29 மாணவிகளுமே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுள் சில மாணவர்கள் வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சைப் பெற்று வீடு திரும்பியுள்ள நிலையில், சில மாணவர்கள் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருவதாகவும் இவர்களில் நிலை சாதாரணமாக உள்ளதென்றும் வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்துள்ளன.
Related Post

மட்டக்களப்பில் அரச வங்கியொன்றில் 2 கோடி ரூபாய் தங்க நகை மாயம்
மட்டக்களப்பு ஓட்டமாவடியில் உள்ள அரச வங்கியொன்றில் இருந்து 2 கோடி ரூபாவிற்கும் அதிகமான [...]

மதுபான விருந்தில் குழு மோதல் – இளைஞர் உயிரிழப்பு, நால்வர் படுகாயம்
முல்லைத்தீவு மாவட்டம் மல்லாவி – துணுக்காய் திருநகர் பகுதியில் நேற்று இரவு மதுபான [...]

ஒமிக்ரோன் தொற்றின் துணை மாறுபாடு தொடர்பில் எச்சரிக்கை
ஒமிக்ரோன் தொற்றின் துணை மாறுபாடு B.A.5 தொடர்பாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக நோய் [...]