காரும் பேருந்தும் மோதியதில் மருத்துவர் உட்பட 5 பேர் படுகாயம்

கொழும்பில் இருந்து வவுனியா நோக்கி சென்ற ஆடம்பர பேருந்தும் மருத்துவர் ஒருவர் ஓட்டிய காரும் நேருக்கு நேர் மோதியதில் மருத்துவர் உட்பட 5 பேர் படுகாயமடைந்து மாரவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் மாரவில முதுகட்டுவ பிரதேசத்தில் இன்று அதிகாலை நடந்துள்ளது என மாரவில பொலிஸார் கூறியுள்ளனர்.
விபத்தில் மாரவில வைத்தியசாலையின் மருத்துவரின் கால் முறிந்து படுகாயம் ஏற்பட்டுள்ளதுடன் பேருந்து சாரதி மற்றும் பேருந்து பயணித்த பயணி ஒருவரின் காலும் முறிந்துள்ளது என பொலிஸார் கூறியுள்ளனர்.
பேருந்தும், காரும் வீதியின் நடுவில் நேருக்கு நேர் மோதியுள்ளன.வீதியில் இரண்டு புறமும் மழை நீர் நிரம்பி காணப்பட்டதால், இரண்டு வாகனங்களும் வீதியின் நடுவில் பயணித்துள்ளன.
வாகனங்கள் மோதுண்ட வேகத்தில் பேருந்து, வீதியில் இருந்த மரம் ஒன்றையும் உடைத்துக்கொண்டு, அருகில் இருக்கும் மதில் சுவரில் மோதி வீடொன்றையும் சேதப்படுத்தியுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
Related Post

இலவசமாக விநியோகிக்கப்படும் டீசல் – விவசாய அமைச்சு
சீன அரசாங்கத்தினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட டீசல் தொகை நெல் விவசாயிகளுக்கு இன்று (09) [...]

மின்வெட்டு குறித்த புதிய அறிவிப்பு
நாளை (06) மற்றும் நாளை மறுதினம் (07) ஆகிய தினங்களில் 2 மணித்தியாலம் [...]

அகதிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்து விபத்து – 79 பேர் பலி
கிரேக்க கடற்கரையில் அகதிகளை ஏற்றிக்கொண்டு சென்ற பெலோபொன்னீஸில் படகு கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. [...]