இலவசமாக விநியோகிக்கப்படும் டீசல் – விவசாய அமைச்சு

சீன அரசாங்கத்தினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட டீசல் தொகை நெல் விவசாயிகளுக்கு இன்று (09) முதல் இலவசமாக விநியோகிக்கப்படும் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்நாட்டில் விவசாயம் மற்றும் மீன்பிடியில் ஈடுபடும் மக்களுக்காக ஜனாதிபதியின் வேண்டுகோளுக்கு இணங்க சீன அரசாங்கம் 10.06 மில்லியன் லீற்றர் டீசலை நன்கொடையாக வழங்கியிருந்தது.
நெற்செய்கை மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு இலவச எரிபொருள் விநியோகம் இன்று முதல் ஆரம்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக விவசாய அபிவிருத்தி திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் ஏ.எம். எச். எல். அபேரத்ன தெரிவித்தார்.
இணையவழியில் விசேட வவுச்சர் ஊடாக ஒவ்வொரு விவசாயிக்கும் எரிபொருள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதுடன், அந்த வவுச்சரின் உத்தியோகபூர்வ வெளியீடு இன்று முற்பகல் 11.00 மணியளவில் விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர தலைமையில் நடைபெறவுள்ளது.
இதன்படி, அறுவடை நடவடிக்கைகளுக்காக விவசாயிகளுக்கு ஒரு ஹெக்டேயருக்கு 15 லீற்றர் டீசலும், 02 ஹெக்டேயருக்கு 30 லீற்றர் டீசலும் வழங்கப்படவுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
Related Post

யாழில் 19 வயது இளைஞன் மீது கொடூரத் தாக்குதல் – மணல் கடத்தல் கும்பலின் அட்டூழியம்
மணல் கடத்தல் கும்பல் தொடர்பாக விசேட அதிரடிப்படையினருக்கு தகவல் வழங்கியதாக கூறி 19 [...]

யாழில் முஸ்லீம் மக்களினால் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது
யாழ்ப்பாண முஸ்லிம் மக்களினால் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாணம் ஐந்து சந்திப்பகுதியில் [...]

யாழ். கோப்பாயில் வீடு புகுந்து வாள்வெட்டு – குடும்பஸ்த்தர் படுகாயம்
யாழ்.கோப்பாய் பகுதியில் நேற்றுமுன்தினம் இரவு இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் 54 வயதான நபர் [...]