கிளிநொச்சியில் கள்ள சந்தையில் டீசல் வாங்க ஆசைப்பட்ட மூவருக்கு ஏற்பட்ட துயரம்


கிளிநொச்சி மாவட்டத்தில் கள்ள சந்தையில் எரிபொருள் வாங்க ஆசைப்பட்ட 3 பேர் சுமார் 77 ஆயிரம் ரூபாய் பணத்தினை பறிகொடுத்துள்ளனர்.

குறித்த சம்பவங்கள் கனகாம்பிகை குளம், பாரதிபுரம், மலையாளபுரம் பகுதிகளில் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கனகாம்பிகை குளத்தில் 12 ஆயிரம் ரூபாய் பணத்திற்கு டீசல் வாங்கிய நபருக்கு டீசலுக்கு பதிலாக தண்ணீர் கொடுக்கப்பட்டுள்ளது.

அதேபோல் பாரதிபுரத்தில் 35 ஆயிரம் ரூபாய்க்கு டீசல் வாங்கிய நபருக்கும் டீசலுக்குப் பதிலாக தண்ணீர் கொடுக்கப்பட்டிருக்கின்றது.

மேலும் மலையாளபுரம் பகுதியில் 30 ஆயிரம் ரூபாய்க்கு டீசல் வாங்குவதற்கு பணம் கொடுத்த நிலையில் பணத்துடன் திருடர்கள் தப்பி ஓடியிருக்கின்றனர்.

இவ்வாறு தினசரி கள்ள சந்தையில் எரிபொருள் வாங்க முயற்சித்து தினசரி பொதுமக்கள் ஏமாற்றப்பட்டுவரும் நிலையில் பொதுமக்கள் இனியும் அவதானத்துடன் இருப்பதே சிறப்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *