எரிபொருள் வரிசையில் ஒருவர் திடீர் மரணம்
பாணந்துறை, வெகட பிரதேசத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வரிசையில் நின்ற ஒருவர் திடீர் சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளார்.
முச்சக்கரவண்டிக்கு எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்காக குறித்த நபர் வரிசையில் நின்ற கொண்டிருந்த போது ஏற்பட்ட திடீர் சுகயீனம் காரணமாக அவர் பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஆம்புலன்ஸ் சுமார் அரை மணி நேரம் தாமதமாக வந்ததாகவும், பின்னர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்ததாகவும் சம்பவ இடத்தில் இருந்தவர்கள் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் 53 வயதான ஹிரன பிரதேசத்தை சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவரின் மகன் மோட்டார் சைக்கிளுக்கு எரிபொருளைப் பெற்றுக் கொள்வதற்காக அதே இடத்தில் வரிசையில் நின்ற நிலையில் பின்னர் தனது தந்தை இருந்த இடத்திற்கு வந்து மிகவும் உணர்ச்சிவசமான முறையில் நடந்து கொண்டுள்ளார்.