6வது நாளாகவும் கையை விரித்த லிட்ரோ – வரிசையில் மக்கள்
தொடர்ந்து 6வது நாளாக இன்றும் (13) எரிவாயு விநியோகம் இருக்காது என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த 8ஆம் திகதி நாட்டை வந்தடைந்த எரிவாயுக் கப்பலை இதுவரை விடுவிக்க முடியாத நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கப்பலின் உள்ள எரிவாயுவிற்கு 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலுத்த வேண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எரிவாயு தட்டுப்பாடு காரணமாக மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக அடா தெரண செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த சில நாட்களாகவே நுகர்வோர் எரிவாயு பெற வரிசையில் காத்திருக்கின்றதை காணக்கூடியதாக இருக்கின்றது.